இந்திய தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்… தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ச்சியா இந்தியா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய அணி சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு வரும் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கக் கூடியவை. அதனால் தென் ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஆனால் இப்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆண்ட்ரிச் நோர்க்யா டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.