சென்னை வழியாக சென்ற பெண்ணுக்கு ஒமிக்ரான்! – ஆந்திராவில் அதிர்ச்சி!!
வெளிநாட்டிலிருந்து சென்னை விமானம் நிலையம் வந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் வேகமாக பரவ தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு நடத்திய சோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் ஆந்திராவில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.