1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (11:54 IST)

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய கூழாங்கல்! விக்னேஷ் சிவன் வருத்தம்!

இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட கூழாங்கல் திரைப்படம் இப்போது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர்ப் ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக கூழாங்கல் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இப்போது ஆஸ்கர் போட்டியின் இறுதிப்பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை. இதுகுறித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய டிவீட்டில் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.