களைகட்ட போகும் IPL திருவிழா.... ஐபிஎல் போட்டிகள் நடத்தும் நாடு இதுதான்...
கடந்த மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் நிலவரம் தீவிரமடைந்து வருவதால் இதுவரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமலே உள்ளன. அதேசமயம் வேறு நாடுகளில் ஐபிஎல் நடத்துவது, பார்வையாளர்கள் இல்லாத போட்டியாக நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. ஐபிஎல் தொடர் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் எனவும், இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளதாவது :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும். விரையில் போட்டி அட்டவணை குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும். ஐபிஎல் போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.