திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (18:30 IST)

நூலிழையில் சதத்தை மிஸ் செய்த ஒமர்சாய்.. தெ.ஆப்பிரிக்காவுக்கு இலக்கு எவ்வளவு?

Afghanistan
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் நிலையில் 244 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி 245 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஒமர்சாய் மிக அபாரமாக விளையாடி 97 ரன்கள் அடித்தார். மேலும் அவர் கடைசி வரை அவுட் ஆகாமலும் இருந்தார்.  நூலிழையில் அவர் சதத்தை தவறவிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 
 
இந்த நிலையில்  இன்றைய கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று  ரன் ரேட்டையும் அதிகரித்து அரை இறுதிக்கு தகுதி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran