1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (17:57 IST)

பென் ஸ்டோக்ஸ் அபார சதம்.. நெதர்லாந்துக்கு 300க்கும் மேல் இலக்கு..!

Netherlands
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.  
 
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்பென் ஸ்டோக்ஸ்  அபாரமாக விளையாடி 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்துள்ளார். டேவிட் மலன்  87 ரன்கள் அடித்தார். 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் 340 என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாட உள்ளது. புள்ளி பட்டியலை பொருத்தவரை இங்கிலாந்து அணி ஒரே ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது. 
 
நெதர்லாந்து அணி  இரண்டு வெற்றிகள் 4 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் நல்ல ரன் ரேட் உடன் வெற்றி பெற்று இன்னும் ஒரு போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் ஒரு சிறிய வாய்ப்பு அரையிறுதிக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva