திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (07:32 IST)

டி20 அணி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் கேப்டன் ராஜினாமா!

உலக கோப்பை டி20 போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்தியா உள்பட அந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் வீரர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் டி20 அணி அறிவிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அந்த அணியின் கேப்டன் ரஷித்கான் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணி வீரர்கள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த அணியின் கேப்டன் பதவியை ரஷித்கான் ராஜினாமா செய்தார் 
 
கேப்டன் என்ற முறையில் தேர்வு குழுவினர் தங்களிடம் ஆலோசிக்கவில்லை என்றும் தன்னிச்சையாக தேர்வு குழுவினர் வீரர்களை தேர்வு செய்ததாகவும் ஆப்கானிஸ்தான் நாட்டின் கேப்டனாக இருந்த ரஷித்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
டி20 அணி அறிவிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் கேப்டன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது