செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:43 IST)

பெண்கள் போராட்டத்தை ஒடுக்க தாலிபன்கள் புது உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமை கோரி நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாலிபன்கள் தங்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்தனர். இதில் ஒரு பெண்கூட இல்லை. 
 
மேலும் தாலிபன்கள் பெண்கள் விவகாரத்துக்கான அமைச்சரவையையும் ஒழித்துவிட்டனர். இதனால் சம உரிமை வேண்டும், பெண்களுக்கு அரசில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி ஏராளமான பெண்கள் காபூல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமை கோரி நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆம், 
அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவித்துள்ளனர். அதோடு எழுப்பப்படும் முழக்கங்கள், ஏந்திச்செல்லும் பதாகைகளுக்கும் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தலிபான்கள் அரசு அறிவித்துள்ளது.