திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:01 IST)

தாலிபன் ஆட்சியை அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை - அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசை அவசரமாக அங்கீகரிக்க அவசியமில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. 
 
அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய நிலையில் தாலிபான்கள் மொத்த நாட்டையும் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இன்னும் அங்கு ஒரு நிலையான ஆட்சி மற்றும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்படாத சூழல் இருந்தது. 
 
ஆனால் இப்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
இதனிடையே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசை அவசரமாக அங்கீகரிக்க அவசியமில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. அபானிஸ்தானில் எஞ்சி இருக்கும் அமெரிக்கர்களை மீட்பது குறித்து தாலிபான்களுடன் பேசிவருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.