விராட் கோலி கேப்டனாக முன்னின்று வழிநடத்துக்கிறார்… பாராட்டிய ஆர் சி பி ஜாம்பவான்!
ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி முன்னின்று சிறப்பாக செயல்படுவதாக ஏ பி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன. இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஐபிஎல் போட்டிகள் குறித்து ஆர் சி பி வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் ‘ஐபிஎல் போட்டி தொடர் நடப்பது குறித்து பிசிசிஐ ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அறிவித்தது. ஐபிஎல் ஐ நடத்தை பிசிசிஐ செய்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களுடன் இருப்பதை முன்பை விட சிறப்பாக உணர்கிறேன். அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக வழிநடத்தி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். கேப்டன் எடுத்துக்காட்டாக இருக்கும் போது வீரர்கள் அதை பின் தொடர்ந்து செல்வது எளிதாகும்.’ எனக் கூறியுள்ளார்.