ஐபிஎல் தொடரில் முதல் அமெரிக்க வீரர்! எந்த அணியில் தெரியுமா?
ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசனில் அமெரிக்காவைச் சேர்ந்த அலி கான் என்ற வேகப்பந்து வீச்சாளர் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார்.
இந்தியாவில் கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் முதல் முதலாக அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த கரிபியன் லீக் போட்டிகளில் பொல்லார்ட் தலைமையிலான அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஹேரி குர்னி காயம் காரணமாக அணியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக அலிகான் சேர்க்கப்பட்டுள்ளார். 13 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் அமெரிக்க வீரராக அலிகான் சேர்க்கப்பட்டுள்ளார்.