1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (19:15 IST)

2-வது டி-20 போட்டி: இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சு தேர்வு

india-srilanka
இன்றைய இரண்டாவது டி-20 போட்டியில், இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.

கடந்த 3 ஆம் தேதி  நடந்த போட்டடியில்  20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு  இந்திய அணி 162 ரன்கள் அடித்து, இலங்கைக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், இலக்கை   நோக்கி விளையாடிய இலங்கையை  வீழ்த்தி 3  ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்று 3 க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


இந்த நிலையில், இன்றைய இரண்டாவது டொ2- போட்டியில்,  ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

சனகா தலைமையிலான இலங்கை அணி  முதலில் பேட்டிங் செய்யும் நிலையில்,, நிசங்கா, மெண்டிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.