ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே விளம்பரம்… 10 வினாடிக்கு 14 லட்ச ரூபாய்!
ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு 10 வினாடிகளுக்கு 14 லட்ச ரூபாய் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஐபிஎல் 2021 சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் நடந்து வருகிறது. இதனால் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் மூலமாக பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் போட்டிகளுக்கு இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான கட்டணமும் கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளதாம். சுமார் 10 வினாடி அளவுக்கு ஓடும் விளம்பரங்களுக்கு 14 லட்சம் வரை கட்டணம் வசுலிக்கப்படுகிறதாம். ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.