புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (05:31 IST)

சென்னை போட்டியில் புதிய சாதனை படைத்த தோனி-கோஹ்லி

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி, பாண்டியா ஆகியோர் சூப்பராக பேட்டிங் செய்தனர்



 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் தோனி ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் அவர் அடித்த அரை சதத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் 100 அரை சதங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.
 
மேலும் இந்த போட்டியில் மேலும் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 10வது வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் தோனி தலைமையில் தொடர்ச்சியாக ஒன்பது வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் நடந்த போட்டியில் தோனி, கோஹ்லி இருவருமே சாதனை செய்தது சென்னை ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.