புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (07:41 IST)

10 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா: அணியே மாற்றப்படுகிறதா?

10 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா
இந்த கொரோனா நேரத்திலும் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணியை தயாராக இருந்த நிலையில் அந்த அணியில் உள்ள வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இங்கிலாந்து நாட்டிற்கு சென்று மூன்று டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணி முடிவு செய்தது. இதற்கான பயிற்சியில் தயாராகி இங்கிலாந்து புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென 3 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் நேற்று மாலை பாகிஸ்தானின் 7 வீரர்களுக்கு கொரோனா தெரியவந்தது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள 10 வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இங்கிலாந்து செல்லும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து கொரோனாவில் இருந்து வீரர்கள் மீண்டு வரும் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எந்த தொடரில் விளையாடாது என்று கூறப்படுகிறது. அப்படியே விளையாடினாலும் மொத்தமாக புதிய டீம் தான் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு: ஃபாக்கர் ஜாமான், இம்ரான்கான், காசிப் ஃபாட்டி, முகமது ஹசீப், முகமது ஹஸ்னைன், முகம்து ரிஸ்வான், வாஹப் ரியாஸ், ஹெய்டர் அலி, ஹரிஸ் ராவ், ஷதப் கான் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது