1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிக சிறந்ததாக கருதப்படுவது ஏன் தெரியுமா...?

ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசை, அதிலும் குறிப்பாக தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிக சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. 

அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதே போன்ற விஷயங்கள் செய்யப்படும், திதி, திவசம் (சிரார்த்தம்) எந்த வகையில் தர்ப்பணத்திலிருந்து வேறுபடுகிறது என பலருக்கு குழப்பமாக இருக்கும். 
 
ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசை, அதிலும் குறிப்பாக தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிக சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
 
 
தர்ப்பணம் என்பது ஒரு புண்ணிய காரியம். ஒவ்வொரு நாளும் நாம் செய்யலாம். நீர்நிலையில் நின்று சூரியன், அக்னி, வருணன் என எல்லா தேவர்களுக்கும் ஜலத்தை அள்ளி விட்டு, ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வது தர்ப்பணம் ஆகும்.
 
தர்ப்பணம் என்றால் ஒன்றும் இல்லை. ‘திருப்தி செய்வது’ என்று அர்த்தம். நீரை அளித்து அவர்களை திருப்தி செய்து அருளைப் பெறுதல். ஆனால் அமாவாசை, திதி தினத்தில் மட்டும் எள்ளும், நீரும் கலந்து நம் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
 
இந்த இரு நாட்களில் முன்னோர்களுக்கு ரத்த சம்பந்தமான உறவுகள் மட்டும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.