வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (16:15 IST)

வாஸ்து குறைபாடுகளுடன் கட்டிய வீட்டிற்கான பரிகாரங்கள் !!

ganesh homam
வாஸ்து குறைபாடுகளுடன் கட்டிய வீட்டிற்கு, வாஸ்து குறைகளினால் வரும் தீங்குகளைக் குறைக்கலாம்.


கணபதி ஹோமம் பண்ணலாம். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். மேற்கு அல்லது தெற்கு தெருக்குத்து இருந்தால் பிள்ளையார் சிலை வையுங்கள். துளசி செடி வையுங்கள்.

தினமும் மறக்காமல் விளக்கேற்றுங்கள். குறைபாடுகள் உள்ள இடங்களில் கல் உப்பை வையுங்கள்.

ஈசான்யம் கெட்டிருந்தால் நித்ய மல்லி செடி வையுங்கள்.வாசல் சரி இல்லையென்றால் கண்ணாடி வையுங்கள்.

'ஓம் நமோ வாஸ்து தேவாய நமஹ' என்று 27 முறை அல்லது 108 முறை சொல்லுங்கள். 'ஓம்' ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீடு முழுவதும் ஒலிக்க விடவும்.

எளிய வாஸ்துப் பொருட்களை வாங்கி வைக்கலாம். செப்பு தகடுகளை குறைபாடுகள் உள்ள இடங்களில் பதிக்கலாம்.

வாஸ்து மீன் வளர்க்கலாம். தினமும் நவக்ரக வழிபாடு நலம் தரும். தினமும் தியானம் செய்யுங்கள்.