1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
  4. Some Useful and Vastu Tips to Follow !!

சில பயன்தரும் மற்றும் பின்பற்றவேண்டிய வாஸ்து குறிப்புகள் !!

Vastu
முதன்மை படுக்கை அறையை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். குளியலறை மற்றும் கழிப்பறையை வடமேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.


சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாகவும் இருக்கக் கூடாது.

வீட்டின் மையப்பகுதியில் சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.

மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும். போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும். நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
ஆரோக்கியத்தை பெற்றுத்தரும் மரகத லிங்க வழிபாடு !!