வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (12:49 IST)

வாஸ்து அமைப்பின்படி வீட்டின் நுழைவாயில் எவ்வாறு அமைக்கப்படவேண்டும்...?

வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும். இந்த நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும்.


வீட்டின் பிரதான நுழைவாயில் வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் 'சக்தி' (எனெர்ஜியானது) பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.

வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் 'சக்தி' (எனெர்ஜியை) நுழைய விடாமல், தடுக்கும்.

வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.

பிரதான வாயில் கதவு நல்ல, உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளைவிட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். விருப்பத்திற்கேற்ப நல்லவேலைப் பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் அமைத்துக் கொள்ளலாம். மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருத்தல் நலம்.

வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின், வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.