Daily Horoscope
✕

திருச்செந்தூர் கோவில் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:43 IST)
 
திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.
 
திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
 
மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்
 
மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.
 
திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில்  கிடைக்கும்.
 
திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை  மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
 
திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
 
திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 85-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
 
திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.
 
திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூர்யலிங்கம், சந்திர லிங்கம் உள்ளன.
 
மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

எல்லாம் காட்டு

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

கேது தோஷம் நீங்க விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டிய வழிபாடு!

நாளை கிருஷ்ண ஜயந்தி.. தொட்டு வரும் வழக்கங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments