செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

துளசி மாலையின் ஆன்மீக சிறப்புகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்....!!

தெய்வ வழிபாட்டிற்கு உகந்த ஒன்று துளசி ஆகும். துளசி மகாலட்சுமி அம்சம் மேலும் திருமாலின் திருவடிகளில் சேவை செய்யும் வரம் இந்தச் செடிக்கு மட்டுமே  உரியது.

துளசிக்கு மற்றொரு சிறப்பு பெயராக " விஷ்ணு பிரியா " என்று புகழ் பெற்றுள்ளது. அற்புதம் மிக்க துளசிச் செடியை வீட்டில் வைத்து வழிபடும்போது நேர்மறையான ஆற்றல் அங்கு ஊடுருவி இருக்கும். மேலும் நாம் குளிக்காமல் துளசிச் செடியை தொடக்கூடாது.
 
துளசி பட்டையிலிருந்து செய்யக்கூடியது துளசி மணி மாலை ஆகும் அதை அணிவதால் கிடைக்கும் நற்பலன்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
 
பெருமாள் கோயில் சென்று வழிபடும்போது துளசி மாலையை அணிவிப்பது சிறப்பாகும். துளசி மாலையை நம் உடம்பில் அணியும் போது குளிர்ச்சித் தன்மையை உடலுக்கு தருகிறது.
 
ஐயப்பனுக்கும் விஷ்ணுவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தில் பிறந்தவர் ஐயப்பன் ஆவார். அதனால் விஷ்ணுவுக்கு  அணிவிக்கப்படும் துளசி மாலையை ஐயப்பனுக்கும் அணிவித்தால் சகலவிதமான சௌபாக்கியங்களும் கிட்டும்.
 
ஐயப்பனுக்கு 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்கும் போது துளசிமாலையை நம் உடம்பில் அணிவித்து விரதம் இருந்தால் இருவரின் அருளும்  பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.