புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கந்தசஷ்டி விரதம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்...?

கந்தசஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குமரன், சுரபத்மனை எதிர்த்து வெற்றி பெற்றதன் #அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. 

அந்த வகையில் இந்த வருடம் அமாவாசையை அடுத்த பிரதமை துவங்கி ஆறு நாட்களில் நிறைவு பெறுகிறது. கந்தசஷ்டி விரத்தின் முக்கிய நிகழ்வான  சுரசம்ஹாரம், திருச்செந்தூர், பழனி போன்ற பிரபலமாக உள்ள முருகன் கோவில்களில் நடைபெறும். சுரசம்ஹரத்திற்கு பின் முருகனின் திருக்கல்யாணமும்  நடைபெறும்.
 
இந்நிகழ்வை காண முருகன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது.
 
விரத நாட்களில் அதிகாலையில் துயிலெழுந்து நீராட வேண்டும். காலையும், மாலையும் வீட்டில் விளக்கேற்றி கந்தனை மனதார வழிபட வேண்டும். விரத காலங்களில் கந்தசஷ்டி கவசம், கந்தர் அனுபுதி, கந்தகுரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்ய வேண்டும்.
 
விரத நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல் மிகவும் நன்று. இவ்விரதத்தின்போது ஆறுநாட்களும் ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று  மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
 
நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து நற்குணங்களைப் பெறும் நோக்கில் கந்த சஷ்டி கடைப்பிடிக்கப்படுகிறது.