திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. குடியரசு தினம்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2018 (13:31 IST)

கடலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

வணிகம் செய்ய இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். பல்வேறு தலைவர்களின் போராட்டங்களுக்கு இடையே கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. 
இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. 

மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
 
அதன்படி வரும் 26 ந் தேதி, 69 வது குடியரசு தினம் வருவதையொட்டி, நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய கடலூர் ஆட்சியர் பிரசாத், குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவை சிறப்பாக கொண்டாட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விழாவில் கலந்துகொல்லும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.