Daily Horoscope
✕

இராமலிங்க அடிகளாரின் சிந்தனை துளிகள்...!

Updated: வியாழன், 27 செப்டம்பர் 2018 (19:01 IST)
 
பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
 
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
 
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது. மதவெறி கூடாது.
 
நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
 
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
 
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
 
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே. குருவை வணக்கக் கூசி நிற்காதே.
 
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
 
இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடினார்.

அடுத்த கட்டுரையில்
Show comments