செவ்வாய், 5 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (14:27 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (தனுசு)

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன  போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும்,  ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: உயர்வான எண்ணத்தை கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில்  சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதால்  மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்.
 
குடும்பத்தில் சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.  குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள் கூறும் அறிவுரையை கேட்டுக் கொள்ளுங்கள்
 
தொழில் செய்பவர்கள் கடல் தாண்டி சென்று வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத  பண வரவு இருக்கும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை சிறப்பாக செய்வதன் மூலம் உங்கள் முக்கியத்துவம்  அனைவருக்கும் தெரியவரும்.
 
பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை செய்து கொடுத்து  மகிழ்ச்சியடைவீர்கள். மாணவர்களில் தொழிற்கல்வி பயில்வோருக்கு சில சலுகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று தொழிற்சாலைகளில் செயல்முறையில்  பயில வாய்ப்புகளும் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மந்திற்கு நிம்மதி தரும் சில காரியங்கள் நடக்கும். கட்சித் தொண்டர்கள், மேலிடம் என அனைவரும்  உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு உங்கள் புகழ் உயரும் அளவிற்கு ஒப்பந்தகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு விருதுகள்  கிடைக்கும். அதனால் தன்னம்பிக்கை வளரும்.
 
மூலம்: இந்த குரு பெயர்ச்சியில் வருமானம் நல்லபடி இருந்தும் வீண் செலவுகள் ஏற்படுவதால் மனம் கவலையில் இருக்கும்.  குடும்ப ரீதியாகவோ, தொழில்  ரீதியாகவோ முக்கிய முடிவுகள் எடுக்க சற்று கஷ்டப்பட வேண்டி இருக்கும். 
 
பூராடம்: இந்த குரு பெயர்ச்சியில் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கைக்கு வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும். மாணவர்களுக்கு கிடைக்க  வேண்டிய உதவித் தொகை தடையின்றி கிட்டும். 
 
உத்திராடம் 1ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியில் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது.கண்ட நேரங்களில், கண்ட இடத்தில்  உண்பதை தவிர்ப்பது நல்லது.  குடும்பச் சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும். 
 
பரிகாரம்: தினமும் அம்பாளை வெள்ளை மலர் கொண்டு வழிபடவும். ஸ்ரீ ல்லிதாம்பிகையை போற்றி வழிபடுங்கள்.