செவ்வாய், 5 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (14:58 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (கும்பம்)

கும்பம்:  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் பாக்கிய  ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
தொழில் ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம்  பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: சிறந்த அணுகுமுறையுடன் முன்னேறத்துடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் வாழ்வில் நிறைய அனுபவங்களை சந்திக்கப்  போகிறீர்கள். பலரின் நட்பும் உங்களுக்கு கிடைத்து அதில் நல்ல காரியத்தனத்தையும் நிரூபிக்கப் போகிறீர்கள்.
 
குடும்பத்தில் திருமணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீங்கள் எதிர்பார்த்திருந்ததை விட சிறப்பான வாழ்க்கை அமையும். உங்கள் மனம் தெளிவடையும். தோற்றப் பொலிவு உண்டாகும்.
 
தொழிலில் உங்களின் உயர்வு சிறப்பாக இருக்கும். தைரியமாக எதையும் கையாளுவீர்கள். மனதுக்குள் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி ஓடுவீர்கள். நேரம்,  தைரியம், வாக்கு இவை அனைத்தும் உங்கள் வெற்றிக்கு தோள் கொடுக்கும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களின் மேல் வைத்திருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அமையும். பதவி உயர்வும், பணி  இடமாற்றமமும் உங்களைத் தேடி வரும்.
 
பெண்களுக்கு நஷ்டத்தில் தொழில் செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தொல்லைகள் அகலும். மாணவர்கள் பொது  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகளும், சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும்.
 
அரசியல்துறையினருக்கு உங்களின் புகழ் அனைவருக்கும் தெரியவரும். உங்களின் ஒரு செயலால் மிகுந்த பாராட்டினைப் பெறப்போகிறீர்கள்.  கலைத்துறையினருக்கு பொருளாதார வகையில் உங்கள் நிலை உயரும். நீங்கள் எதிர்பாராமல் சில முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் முக்கிய முடிவுகளில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தலாம். முடிவுகளை தள்ளிப் போடுங்கள். அலைச்சல் அதிகம்  இருப்பினும் தக்க சமயத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள் அல்சர் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கலாம். 
 
சதயம்: இந்த குரு பெயர்ச்சியில் சிலருக்கு எதிர்பார்த்திருந்த வேலை இடமாற்றம் பற்றி நற்செய்திகள் வரலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மையாகவே அமையும். உடன்பணிபுரிபவர்கள் உங்கள் மீது பொறாமை பட நேரலாம். 
 
பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவது பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். நல்லதொரு நற்பணிகளில் ஈடுபடுவீர்கள்.   உடன்பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 
 
பரிகாரம்: தினமும் சிவபெருமானை வழிபட்டு ந்ந்தி தேவரையும் தரிசனம் செய்யுங்கள்.