1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (14:21 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (விருச்சிகம்)

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

 
ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் பஞ்சம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய  ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: தாய் தந்தையரை போற்றும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த குருபெயர்ச்சி பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவர்கள் விருப்பம் நிறை  வேறும்.
 
குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்விர்ர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்கள்  உங்களுக்கு ஆதர்வாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும்.
 
தொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள். உங்களின் தொழிலில் நீங்கள்  வெற்றி அடைவீர்கள்.
 
உத்யோகஸ்தர்கள் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இது வரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும். உங்கள்  உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
 
பெண்களுக்கு பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை வேண்டாம்.  மாணவர்களுக்கு பணத்தால் தடைபட்ட கல்வியும் சிலருக்கு தொடர வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் மாறும்.  அரசியல் துறையினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகமும் உண்டாகும். உங்களைப்பற்றி குறைகூறியவர்கள் உங்களை புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.
 
கலைத்துறையினருக்கு கதை இலக்கியம் பொறுத்த வரை சிலர் விருதுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. சிலர் அரசின் விருதுகளாலும் கௌரவிக்கப் படுவீர்கள்.
 
விசாகம் 4ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியில் ஏற்கனவே பணியிலிருந்து வருபவர்களுக்கு இது நாள் வரை மறுக்கப்பட்டு வந்த உயர்பதவியொன்று இப்போது கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் வழக்கம் போல் நடந்து வரும்.
 
அனுஷம்: இந்த குரு பெயர்ச்சியில் அலுவலகம் செல்லும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு உணவருந்தாததால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. 
 
கேட்டை: இந்த குரு பெயர்ச்சியில் உற்றார், உறவினர்களுடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். 
 
பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லி வாருங்கள்.