திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (09:01 IST)

சிவகாசி அருகே பட்டாசு வெடித்து 4 பேர் காயம்!

சிவகாசி மாவட்டம் பள்ளப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

பள்ளப்பட்டியைச் சேர்ந்த தேசிங்கு ராஜ் என்பவருக்கு சொந்தமான சதானந்தபுரம் பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு அறையில் இருந்த வெடிமருந்துகளில் உராய்வு ஏற்பட்டதில் அறையில் இருந்த ஆதிலட்சுமி, செந்தி, முத்துமாரி மற்றும் சுந்தர பாண்டி ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் நான்கு பேருமே ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.