அமைச்சர் சி வி சண்முகத்துக்குக் கொரோனா தொற்று உறுதி!
அதிமுக அமைச்சர் சி வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு 7000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலயில் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இப்போது அமைச்சர் சி வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று இப்போது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.