ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (07:29 IST)

இரவோடு இரவாக சென்னை சாலையின் பெயரை மாற்றிய அதிகாரிகள்!

இரவோடு இரவாக சென்னை சாலையின் பெயரை மாற்றிய அதிகாரிகள்!
சென்னையில் உள்ள சாலை ஒன்றில் ஈவேரா பெரியார் சாலை என அழைக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அந்த வெஸ்டன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது 
 
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக அரசுக்கு மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்தனர். உடனடியாக சாலையின் பெயரை பெரியார் பெயருக்கு மாற்ற வேண்டும் என்றும் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் இணைய தள பக்கத்தில் பெரியார் சாலை என்றே மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் நேற்று இரவு இரவோடு இரவாக வெஸ்டன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்ட சாலைக்கு மீண்டும் ஈவேரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான ஸ்டிக்கரை அதிகாரிகள் இரவோடு இரவாக ஒட்டி உள்ளதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. பெரியார் ஈவேரா சாலையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது கண்டன குரல் கொடுத்த அனைவருக்கும் இது ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது