வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:37 IST)

தொல்லியல் துறை உத்தரவு எதிரொலி: தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் மூடப்பட்டது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவிடங்கள் மற்றும் கோவில்கள் அனைத்தையும் மூட வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவிடங்கள், கோவில்கள் இன்று முதல் மூடப்படுகின்றது
 
தமிழகத்தை பொருத்தவரை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் சிற்பக் கலை கோவில் உள்பட அனைத்து கோவில்கள் மற்றும் நினைவிடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பக்தர்களுக்கு மட்டுமாவது தஞ்சை பெரிய கோயில் திறக்கப்பட வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தொல்லியல் துறை அதற்கு செவி சாய்க்காமல் தஞ்சை பெரிய கோயிலை மூடி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனால் சுற்றுலா துறைக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தஞ்சை பெரிய கோயில் உள்பட ஒரு சில சுற்றுலாத் தளங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்