ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
வரும் சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது.
இந்த நிலையில் , நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.
இந்த, நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரகேசர் சார்பில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்த போது, இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.