புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2025 (14:55 IST)

பணக்கொழுப்பு இருப்பவர்களுக்கு தான் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவை: சீமான்

Seeman
பணக்கொழுப்பு இருப்பவர்களுக்கு தான் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவை என்று   நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தேர்தல் வியூகம் என்ற நோய் வந்துவிட்டதாகவும், பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். முன்பு ஆட்சி செய்த காமராஜர், அறிஞர் அண்ணா ஆகியோர் தேர்தல் வியூக அமைப்பாளரை வைத்துக் கொள்ளவில்லை என்றும், பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும், "கத்திரிக்காய் என்று  பேப்பரில் எழுதி பயன் இல்லை. நிலத்தில் இறங்கி விதை போட்டு செடியாக்கி, தண்ணீர் விட்டு வளர்க்க வேண்டும். அதுபோல தான், மேஜையில் அமர்ந்து கொண்டு தேர்தல் வியூகம் நிபுணர்கள் எழுதுவதால் எந்த பயனும் இல்லை. களத்தில் இறங்கி, களப்பணி செய்ய வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், "எனக்கு மூளை இருக்கிறது, ஆனால் கேட்பதற்கு தான் காது இல்லை" என்று கூறியவர், தைப்பூசத்திற்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு ’அப்புறம் எதற்காக அவர் முருகன் மாநாடு நடத்தினார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Edited by Siva