சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகள்: ஜனாதிபதி உத்தரவு!
சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய வழக்கறிஞர்கள் பெயர்கள் நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 2 பேர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர்ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு நீதிபதிகள் நியமனம் மூலம் சென்னை ஐகோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது
மேலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் 14 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது