வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (11:42 IST)

பக்கவாதம் ஏற்பட்ட அரியவகை வெள்ளைப்புலி மரணம்! – சோகத்தில் வண்டலூர் பூங்கா!

வண்டலூர் பூங்காவில் இருந்த அரிதான வெள்ளைப்புலி பக்கவாதத்தால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் மான், சிங்கம், மயில், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் மூலம் விலங்குகளை பராமரிப்பதற்கான செலவுகளை வண்டலூர் பூங்கா நிர்வகித்து வருகிறது.

வண்டலூரில் அரியவகை வெள்ளை புலிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு ஆகன்ஷா என்னும் 13 வயதுடைய பெண் வெள்ளைப்புலியும் பராமரிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் ஆகன்ஷாவுக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளைப்புலி இறந்துள்ளது. அரியவகை வெள்ளைப்புலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.