வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (19:39 IST)

பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தர்ம அடி

மதுரை மாவட்டத்தில் செல்போன் மூலம் பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதியவரை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உள்ள சிலைமான் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு செல்போனில் அழைத்த நபர் மிகவும் ஆபாசமாகவும், அநாகரிமான முறையில் பேசியுள்ளார். அத்துடன் பெண்ணை  பாலியல் உறவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தொல்லை சில மாதங்களாக நீடித்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்த ஆசாமியின் தொல்லை தாங்க முடியாமல் அப்பெண் தனது உறவினர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். அவர்கள்  அப்பெண்ணிடம் பேசச் சொல்லி அந்த நபரை குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி உள்ளனர். இதை நம்பி ஆசையுடன் சென்ற நபரை பெண்ணின் உறவினர்கள் அடித்து உதைத்தனர். 
 
அதன்பின்னர் அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் அந்நபரிடம் விசாரித்ததில்  உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார் . தற்போது அவரிடம் போலீஸார் மேலும் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.