1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (12:53 IST)

தனிவிமானத்தில் தொகுப்பாளினியுடன் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 


 
பிரபல நகைக்கடை திறப்புவிழாவில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து மதுரைக்கு தனி விமானத்தில் நடிகர் விஜய்சேதுபதி பயணித்துள்ளார். அவருடன் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி தியா உடன் சென்றுள்ளனர். இதனை புகைப்படமெடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


 
நேற்று சென்னை தி.நகரில் நடைபெற்ற அதே நிறுவனத்தின் நகை கடை திறப்பு விழாவில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் மற்றும் நடிகர் பிரசாந்த் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.