கணவன் கோபமாக சொன்ன வார்த்தை… அதனால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
ராமநாதபுரத்தில் கணவன் மதிய உணவு தயார் செய்ய சொல்லி கோபமாக பேசியதால் மனைவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மேல்முடிமன்னார் கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதிகள் பொன்முருகன் (27) மற்றும் குருதேவி (20) . இவர்களுக்குக் கடந்த ஆண்டு திருமணம் ஆகி இப்போது 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அலுவலகத்துக்கு கிளம்பிய பொன் முருகன் மதிய உணவை சீக்கிரமாக தயார் செய்ய சொல்லி மனைவியிடம் கோபமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த குருதேவி கணவர் கிளம்பியதும் தன் மீதும் குழந்தையின் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார்.
இதனால் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவரையுமே காப்பாற்ற முடியவில்லை. இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.