1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (20:54 IST)

மதுபானம் விற்ற பெண் கைது...105 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுவிற்பனை கஞ்சா விற்பனை, போதைப் பொருட்கள் விற்பனைஅ ஆகியவை அதிகரித்து வருவதாக போலீஸாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து காவல் ஆணையர் சட்டவிரோதமாக மதுபாட்டில், போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை பல்லவன் சாலையில் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் தலைமையில்  போலீஸார் பணியில் இருந்தபோது , மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த பெண்ணை( 58 ) கைது செய்தனர்.  அவரிடம் இருந்த 105 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.