தடையை மீறி பள்ளிவாசலில் தொழுகை – காவல் ஆய்வாளர் இடமாற்றம்!
மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடந்த நிலையில் அதை தடுக்காத காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் பள்ளிவாசல் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ளதால் வீடுகளிலேயே தொழுகை நடத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மயிலாடுதுறையில் செம்பனார் கோவில் அருகே உள்ள பள்ளிவாசல் ஒன்றில் அனுமதியின்றி 75 க்கும் மேற்பட்டோர் கூடி தொழுகை நடத்தியதாக கூறப்படுகிறது. அனுமதியின்றி நடந்த தொழுகையை தடுக்காததால் செம்பனார் கோவில் ஆய்வாளர் அனந்த பத்மநாபன் நாகப்பட்டிணம் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.