வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (14:20 IST)

தமிழக எம்.பிக்களின் குரல் நாடாளுமன்றத்தில் எடுபடுமா ? மக்கள் எதிர்பார்ப்பு..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து மூன்றாண்டுகள் ஆகப்போகிறது. அவர் இருந்த போது அதிமுக கட்சியை தன் கையில் கட்டுக்கோப்பாக வைத்து ஆட்சியை  வழி நடத்தினார். அவர் இருந்தவரைக்கும் அக்கட்சியில் உள்ள யாரும் அவரது அனுமதி இல்லாமல் பேச முடியாது. இந்நிலையில் இன்று கட்சியின் ஏற்பட்ட தலைமைப் பதவிக்கான இடத்தை ஓ.பி.எஸ். இ.பி. எஸ் ஆகிய இருவரும் நிரப்பி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் வெற்றி எம். ஜி. ஆரின் சரித்திர வெற்றியைப் போல் இருமுறை தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக தோற்றது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் அதிமுக மாநிலங்களை உறுப்பினராக உள்ள மைத்ரேயனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை அவர் கண்ணீருடன் நிகழ்த்தினார்.
 
அவர் கூறியதாவது :முன்னாள் முதல்வர் என் மீது நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத்திற்கு 3 முறை அனுப்பி வைத்ததை மிகவும் உருக்கத்துடன் அவர் நினைவு கூர்ந்தார்.
 
மேலும் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் தனக்கு நாளை எதாவதும் நிகழ்ந்தால் கூட இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடாது என்று உருக்கமாகப் பேசியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று சென்னை மெரின கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மைத்ரேயன் மரியாதை செலுத்தினார்.
 
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : அதிமுக சார்பாக மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வாய்ப்பளிக்காதது வருத்தம் அளிப்பதாகவே அவர் தெரிவித்தார்.
 
இதுஒருபுறம் இருந்தாலும், அதிமுகவின் பிரதான எதிர்கட்சியாக உள்ள திமுக கூட்டணி இம்முறை மக்களவைத் தேர்தலில் அசுரப்பாய்ச்சலுடன் பாய்ந்து 37 தொகுதிகளை வாரிச்சுருட்டியது. இந்த 37 எம்பிக்களும் அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் எம்பியும் ஓட்டுமொத்த தமிழகத்தின்  உறுப்பினர்களாக மக்களவையில் நுழைந்துள்ளனர். 
 
ஆனால் அதிமுக சார்பாகச் சென்ற ரவீந்தரநாத் குமார் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் புகழ்ந்து மோடியை பாராட்டினார். இவராவது அதிமுக சார்பில் ஒரு உறுப்பினர்தான். ஆனால் திமுக சார்பில் எம்பியாக அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் உட்பட சிலர் மட்டுமே வாய் திறந்து சபையில் குரல் எழுப்புகின்றனர். குறிப்பாக கனிமொழி,ஆ. ராசா, தமிழிசை தங்க பாண்டியன், தயாநிதிமாறன் உள்ளிட்டவர்களுக்குத்தான் சபையில் பேச அக்கட்சி தலைமை பேச அனுமதித்துள்ளதா ? என்ற கேள்வியும் எழுகிறது.
 
தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியாக இருந்தாலும் கூட ராஜ்ய சபாவிலும், லோக் சபாவிலும் நம் தமிழர்களின் எண்ணங்களை தேவைகளை நிறைவேற்றவும் ,தமிழர்களின் முக்கியமாக காவிரி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு, கூடங்குளம் அணுக்கழிவு, நீட்தேர்வு, புதிய கல்விக்கொள்கை  போன்றவற்றிற்கும் சுமூகமாக தீர்வு காணக்கிடைத்திருக்கும்  ஒரேபொதுத்தளம் நம் நாட்டை ஆளுபவர்கள் அமர்ந்து விவாதிக்கும் இந்த சபைதான். அதற்காக தமிழகத்தில் உள்ள எம்பிக்கள் நம்  தமிழர்களுக்காக இணைந்து மக்களின் குரலாக எதிரொலிக்க  வேண்டியது அவர்களின் கடைமையும் கூட.