புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (13:42 IST)

தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? முதல்வரே அளித்த விளக்கம்!

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படும் என்ற தகவல் உண்மையில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அச்சத்தை மூட்டும் விதமாக உள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் பாதிப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 70 சதத்துக்கும் மேல் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே தெரிவித்தததாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.

இந்நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி விளக்கியுள்ளார். அதில் ’தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியாகும் தகவல் உண்மையில்லை. அதுபோல பொய்யான தகவலைப் பரப்பியவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் இன்னும் கொரோனாவின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளவில்லை. சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அதனால், அரசின் உத்தரவை மக்கள் மதிக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.