வெள்ளி, 4 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 2 ஏப்ரல் 2025 (07:57 IST)

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறக்க ராமேஸ்வரம் வர இருப்பதை அடுத்து, மூன்று நாட்கள் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் பிறகு ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
 
பிரதமர் வருகையை ஒட்டி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டு படகுகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ராமேஸ்வரம் முழுவதும் பிரதமரின் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva