திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (09:27 IST)

மச்சானின் மனைவி உனக்குத் தங்கையில்லையா ?- கணவனைக் கொன்ற மனைவி பகீர் தகவல்!

ரமேஷ் மற்றும் நித்யா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் தனது தம்பி மனைவியிடம் அத்துமீறிய கணவரை மனைவியேக் கொலை செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டுக்கே வராமல் இருந்துள்ளார். அப்படியே வந்தாலும் பிரச்சனை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த  4 ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அது சம்மந்தமாக விசாரணையில் இறங்கிய போலீஸார் அவரது மனைவி நித்யா மற்றும் மைத்துனர் அரவிந்தன் ஆகியோர் மீது சந்தேகப்பட்டு அவர்களை விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து குற்றத்தை ஒத்துக்கொண்ட இருவரும் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் ரமேஷ். குடிபோதையில் அரவிந்தனின் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நித்யா மற்றும் அரவிந்தன் ஆகியோர் இணைந்து ரமேஷின் தலையில் தாக்கிக் கொலை செய்துள்ளனர். இந்த சமபவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.