திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (18:28 IST)

ஒரு மணிநேரத்தில் மூதாட்டிக்கு உதவித்தொகை – நம்பமுடியாத வேகத்தில் அரசு அதிகாரிகள் !

திருப்பத்தூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்த மூதாட்டிக்கு உதவிப்பணம் கிடைக்க அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் அப்பாண்டகுப்பம் என்ற பகுதியில் வசித்து வருபவர் அம்சா என்ற 70 வயது மூதாட்டி. வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமாக இருந்துவந்துள்ளது. உதவிக்கு ஆட்கள் இல்லாமல் கஷ்டப்படும் அவரது நிலைமையை மோகன் என்பவர் விடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பரப்பினார்.

இதைப்பார்த்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவருக்கு உதவித்தொகை கிடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஒரு மணிநேரத்தில் அவருக்கு முதியோர் உதவித் தொகை சான்றிதழ் அளித்தனர். இதை அடுத்து வட்டாட்சியர் மகாலெட்சுமி முதல் மாத தவணையை அவரிடம் அளித்தார்.