இவ்வளவு நல்ல கட்சியா திமுக? நெட்டிசன்கள் கிண்டல்

திங்கள், 1 ஜூலை 2019 (07:30 IST)
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தி பேரவையில் வலியுறுத்தாதது ஏன்? என திமுகவின் நாளேடான முரசொலியில் விளக்கப்பட்டுள்ளது. அதாவது சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தி பேரவையில் எடுத்துக்கொள்ள செய்வது திமுகவிற்கு ஒன்றும் கடினமான காரியமல்ல என்றும், அப்படி செய்திருந்தால் தமிழகத்தை வாட்டி வதைக்கும் குடிநீர் பஞ்சம், ஹைட்ரோகார்பன் போன்ற பிரச்னைகள் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என்றும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
 
அப்படிபட்ட எதிர்மறை நிலையை தடுப்பதற்காகவே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இப்போதைக்கு வலியுறுத்தபோவதில்லை என்ற  சாதுர்யமான முடிவை மு.க.ஸ்டாலின் எடுத்திருப்பதாகவும் அந்நாளேடு குறிப்பிட்டுள்ளது.
 
திமுகவின் இந்த விளக்கத்தை நெட்டிசன்கள் 'இவ்வளவு நல்ல கட்சியா? என  கிண்டலடித்து வருகின்றனர்.  குடிநீர் பஞ்சம், ஹைட்ரோகார்பன் போன்ற பிரச்னைகளுக்காக விளம்பரம் தேடிக்கொள்ளும் போராட்டங்களை தவிர திமுக ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்றும், குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும்போதும் சிங்கப்பூர் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் ஸ்டாலின் எடுத்த சாதுர்யமான முடிவா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
சமூக ஆர்வலர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளை தூர்வார கிளம்பியிருக்கும் நிலையில் திமுக ஒரு ஏரியையாவது தூர் வார முயற்சித்ததா? என்றும், போராட்டத்தை தவிர திமுகவுக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

பால் விலை உயர்கிறது!.. பொதுமக்கள் அதிர்ச்சி!.. முகவர்கள் கண்டனம்..

41 பேர் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்க கூடாது: நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் முறையீடு..

இனி அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ் அப் மூலம் ஓபி சீட்டு.. வரிசையில் நிற்க வேண்டாம்...

விஜயை அரெஸ்ட் பண்ணியிருந்தா இது நடந்திருக்குமா?!.. அனிதா ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!..

விஜயை சீண்ட சட்டசபையில் சீமான் இருக்கணும்!.. உதயநிதியின் ஆசை நிறைவேறுமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments