திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மருத்துவமனையில் அனுமதி !
பட்டிமன்ற பேச்சாளரும், திமுக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ லியோனி இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்திருந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் லியோனியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உணவு செரிமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தாம் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டது, அதற்கு சிகிச்சை அளிப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து லியோனி, திட்டமிட்டிருந்தபடி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.