1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (16:57 IST)

சசிகலாவுக்கு எல்லாமே தெரியும் ! நான் யார் என்பதை காட்டுகிறேன்...அசராத தினகரன் !

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ளதுதான்..ஆனால் அரசியல் பரபரப்புகளுக்கும், பிரேக்கிங் நியூஸ்களுக்கும் பஞ்சமே இருந்தது இல்லை.  அந்த வகையில் சில தினங்களாகவே அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தங்க தமிழ்ச் செல்வனைப் பற்றிய பேச்சுகள் ஊடகங்களில் வெளியாகிவந்தன.
அதில் முக்கியமானது : அமமுக தலைவர்  டிடிவி தினகரனை விமர்சித்து , ஒரு ரேடியோவில் பேட்டி கொடுத்திருந்தார் தங்க தமிழ்ச்செல்வன். இதன் பிறகு தான் உட்கட்சிக்குள் பிரச்சனை பூதாகரம் ஆனது. 
 
தன்னை கேட்காமல் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்ததாகவும், தன்னை வரம்பு மீறி பேசி , விமர்சித்ததாகவும் அமமுக தலைவர் தினகரன் தங்க தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுத்ததார். தெரிகிறது. 
 
இதனையடுத்து ஊடங்கள் தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் மோதலை அம்பலப்படுத்தியது. பின்னர் இதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரன் : தங்க தமிழ்ச்செல்வன் என்னைப் பார்த்தால் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார். அவருக்கு மாற்றாய் இன்னோருவரை அமர்த்துவோம்  என்று தெரிவித்தார். 
 
பின்னர் தங்க தமிழ்ச்செல்வனும், தினகரனுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்த நிலையில் நேற்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதனால் அரசியலில் அடுத்தடுத்து பரப்பரப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் இன்று தினகரன் முதலில் சொன்னதுபோல்  இன்று  தேனி மாவட்டத்தில் அமமுக பொறுப்பாளராக முத்துசாமி என்பவரை நியமித்துள்ளார்.
 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் தினகரன், 
 
இங்கு அரசியலில் நடப்பது எல்லாமே சசிகலாவுக்கு தெரியும் என்றும் திமுகவுக்கு போனவர்களை பற்றி கவலையில்லை என்று தெரிவித்து வழக்கம்போல் கூலாகச் சிரித்துவிட்டுச் சென்றார்.
 
ஆனாலும் அடுத்தடுத்து தோல்வியால் துவண்டுவிடாமல், தன் கட்சியை ( அமமுகவை ) அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார் தினகரன். அவரது அமமுக கட்சி நிர்வாகிகளுக்கு தற்போதைய ஆறுதல் தலைவர் தினகரன் மட்டும்தான். எனினும் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானது போல் தானும் ஜெயிப்பேன் என்று தினகரன் சூளுரைத்து வருவதாகவும் தகவல்கள்வெளியாகிறது.