செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (12:47 IST)

’அப்படி பேசியவர்களின் வாயில் மண் விழுந்துள்ளது - ஸ்டாலின்

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி  அமோகமாக  வெற்றி பெற்றது. தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு  37 எம்பிக்கள் உள்ளனர், இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்  தங்க தமிழ்ச்செல்வம், முக ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார்.இது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நேற்று அமமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் தினகரன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் யார் அமமுவை விட்டு போனாலும் அமமுக இயங்கும். இங்கு நடப்பது எல்லாம் சசிகலாவுக்கு தெரியும்! தங்க தமிழ்செல்வன் திமுகவுக்கு சென்றதன் மூலம் அவரை யார் இயக்கினார்கள் என்பது தற்போது தெரிகிறது. மேலும் திமுக டெல்லியைக் கண்டு பயப்படுகிறது என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் கடலூரில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் கூறியதாவது :
 
திமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க நினைத்து தொட்டுப்பார்க்க முடியாது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துபோயுள்ளனர். மக்களவை - இடைத்தேர்தலில் திமுக அழியப்போகிறது என்று கூறியவர்களின் வாயில்தான் தற்போது மண் விழுந்துள்ளது என்று கடுமையாகம் விமர்சித்தார்.