செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (12:41 IST)

அப்போலோ நிர்வாகம் மறுப்பு - ஜெ.வின் வீடியோவை யார் எடுத்தது?

மறைந்த முதல்வர் ஜெ. மருத்துவமனையில் இருந்த போது எடுத்ததாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை என அப்போலோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.


 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார்.  20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். 
 
ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பு  இந்த வீடியோ வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அப்போலோ நிர்வாகம் “ இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெ.விற்கு நெருக்கமான யாரேனும் ஒருவர் எடுத்திருக்கலாம்” எனக் கூறியுள்ளது.
 
ஜெ. மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், தேவைப்படும் போது அதை வெளியிடுவோம் என சசிகலாவின் சகோதரன் மகன் ஜெயானந்த்  மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஏற்கனவே பலமுறை கூறிவந்தனர். அதேபோல், ஜெ.வின் உத்தரவின் பேரிலேயே சசிகலா ஒரு வீடியோ எடுத்தார் எனவும் தினகரன் கூறியிருந்தார். இது அந்த வீடியோவாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.